குற்றால மற்றும்,ஐந்தருவி,சிற்றருவி,புலியருவி உள்ளிட்ட பகுதிகளில்போலியான தைலம் பறிமுதல்

by Editor / 10-01-2025 07:40:28am
 குற்றால மற்றும்,ஐந்தருவி,சிற்றருவி,புலியருவி உள்ளிட்ட பகுதிகளில்போலியான தைலம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட குற்றால மற்றும்,ஐந்தருவி,சிற்றருவி,புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலியான தைலம் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுவதாகவும்,இதன் மூலம் அலர்ச்சி  உள்ளிட்டவைகள் ஏற்ப்டுவதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவரது உத்தரவுப்படி குற்றாலம் பேரூராட்சிசெயல் அலுவலர், உணவுபாதுகாப்பு அலுவலர், காவலர், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் மூலம் பிளாஸ்டிக், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவைகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் அபராதம் ரூ.1000/-ம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிமம் இல்லாத கடை 1 தற்காலிகமாக பூட்டப்பட்டது. போலியான தைலம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : போலியான தைலம் பறிமுதல்

Share via