அஜித் குமார் சார்பாக ஒர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது

by Admin / 24-03-2023 12:44:15pm
அஜித் குமார் சார்பாக ஒர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது

பிரபல நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் 85 வயதான அவர் பக்கவாதத்தின் காரணமாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் இறந்தார் .அவருக்கு இறுதி மரியாதை செய்வதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் திரை உலக பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.  திமுக சார்பாக விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  நடிகர்கள் பார்த்திபன் பிரசன்னா இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்டோர் நேரில் வருகை தந்து அஜித்குமாரின் உடைய தந்தையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவருடைய பூதவுடல் ஈச்சம்பாக்கத்தில்  இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது  திரையுலகச் சேர்ந்தவர்களும் அரசியல் பிரமுகர்களும் வருகை தந்ததோடு அதிகமான அஜித்தின்  ரசிகர்களும் வந்து கொண்டிருப்பதால் அஜித் குமார் சார்பாக ஒர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது இது தங்களுடைய குடும்ப நிகழ்வு அதை நாங்கள் குடும்ப நிகழ்வாகவே நடத்த விரும்புகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் சார்பாக ஒர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது
 

Tags :

Share via