கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

by Staff / 30-10-2022 01:29:06pm
 கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

திருச்செந்துார் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று திருநெல்வேலி- திருச்செந்துார் இடையே சிறப்பு ரயிலை மதுரை ரயில்வே கோட்டம் இயக்குகிறது. திருச்செந்துார்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06910) திருச்செந்துாரிலிருந்து இன்று (அக். , 30) இரவு 9: 00 மணிக்கு புறப்பட்டு இரவு 10: 30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-திருச்செந்துார் சிறப்பு ரயில் (06909) திருநெல்வேலியிலிருந்து இன்று (அக். , 30) இரவு 11: 05 மணிக்கு புறப்பட்டு இரவு 12: 30 மணிக்கு திருச்செந்துார் சென்று சேரும். இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீ வைகுண்டம், செய்துங்கநல்லுாரில் நின்று செல்லும்.

 

Tags :

Share via