பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் நேற்றும் இன்றும் இரண்டு நாள்கள் எழுச்சி நடைபயணம்
பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர்அன்பு மணி ராமதாஸ்நேற்றும் இன்றும் இரண்டு நாள்கள் எழுச்சி நடைபயணத்தை மேற்கொண்டார்.நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலஉரிமையாளர்களுக்கு இது வரை வேலை வழங்கவில்லைநான் வரவில்லை.என்.எல்.சியால் இந்த மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.அதனால்ஒட்டுமொத்தமாக இடஙத்தை காலிசெய்து போங்கள் என்று சொலிவதற்காகத்தான் இந்த எழுச்சி நடைபயணம் என்றார்.அத்துடன் ,25ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து பெரும் முதலாளிகளிடன் தனியார் மயமாக்கும் முயற்சியில்மத்திய அரசு முயல்கிறது.இதற்கு நமது மாநில அமைச்சர்.சட்டமன்ற உறுப்பினர்கள் துணை நிற்கிறார்கள்ப.க்கத்தில் உள்ள ஊருக்குத்தானே பிரச்சனை என்று இருந்து விடாதீர்கள்.நாளை உங்கள் ஊரும் அதேநிலைக்கு ஆளாகிவிடும் .நிலக்கரிக்காக தண்ணீர் எடுக்கும் பொழுது உங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் ஆயிரம் அடிக்கு கீழே தண்ணீர் சென்றுவிடும்.அதனால் எங்களுக்கு என்.எல்.சி.தேவை இல்லை வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி , கரிவெட்டி வரைஎன்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்க விட மாட்டோம். சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும்.கடலூர் மாவட்டத்திற்கு பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்திய #NLC இந்தியா நிறுவனம் இனியும் செயல்படத் தேவையில்லை. கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்றார்
Tags :