சொகுசு தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.

by Admin / 24-10-2025 10:20:47am
சொகுசு தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் சின்ன தேர் குரு கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை -44 ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுபேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.. இவ்விபத்தில் பேருந்து உள்ளே சிக்கி கருகி இறந்தவர்கள் 11 முதல் 25 வயர் வரை இறந்து இருக்கலாம் என்றும் ஜன்னல்களை உடைத்து வெளியேறி உயிர் தப்பியவர்கள் 12 முதல் 20 பயணிகள் இருக்கலாம் என்றும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கர்னூல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் .இருப்பினும், அந்தப் பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக இடையூறுகள் ஏற்பட்டன.. ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளனர்.. அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்..

சொகுசு தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.
 

Tags :

Share via

More stories