டெல்லி பல்கலைக்கழக மாணவி ஆசிட் வீச்சு தொடர்பாக அவரது தந்தையை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

by Admin / 28-10-2025 01:47:23am
டெல்லி பல்கலைக்கழக மாணவி ஆசிட் வீச்சு தொடர்பாக அவரது தந்தையை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) இரண்டாம் கட்டத்தை அறிவித்துள்ளது, இறுதி வாக்காளர் பட்டியல்கள் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும். அசாம்  தனி குடியுரிமை விதிகள் மற்றும்  தேசிய குடிமக்கள் பதிவு (NRC) செயல்முறை காரணமாக இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது...

தெருநாய்கள் விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணக்க அறிக்கைகளை தாக்கல் செய்யத் தவறியது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது இந்தியாவை "மோசமான பார்வையில்" சித்தரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் மாதம் தலைமைச் செயலாளர்கள் முன்பு ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "போர் போன்ற" சூழ்நிலைகளுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றும் அதன் பாதுகாப்பு சவால்களை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

சத் பூஜை நிகழ்விற்காக ,டெல்லி உட்பட சில மாநில வங்கிகள் செவ்வாய்க்கிழமை அன்று மூடப்படும். 

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) 27 கட்சித் தலைவர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

 காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தும் முடிவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளன. இது ஒரு "அரசியல் சதி" என்றும் தவறான செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளன .. 

டெல்லி பல்கலைக்கழக மாணவி ஆசிட் வீச்சு தொடர்பாக அவரது தந்தையை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. மூன்று ஆண்களை சிக்க வைப்பதற்காக ஆசிட் வீச்சு கதையை ஜோடித்ததாக தந்தை ஒப்புக்கொண்டார், மேலும் ஒருவரின் மனைவிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா்..

மத்தியப் பிரதேசத்தில்,நிலத் தகராறு வழக்கில் விவசாயி ஒருவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட உள்ளூர் பா.ஜ.க தலைவர் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

பி.எஸ்.இ சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து,  நிஃப்டி 50 ஆசிய சந்தைகளின் லாபத்.துடன்  23,800 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்தது .

இண்டிகோ விமான நிறுவனம்  மும்பை மற்றும் லண்டனை இணைக்கும் தினசரி நேரடி விமானசேவையை தொடங்கியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு போட்டியின் போதுகாயம் ஏற்பட்டு சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

மகளிர் கிரிக்கெட்டில், மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னதாக காயமடைந்த பிரதிகா ராவலுக்கு மாற்றாக ஷஃபாலி வர்மா அணியில் சோ்க்கப்பட்டுள்ளார் . 

டெல்லி பல்கலைக்கழக மாணவி ஆசிட் வீச்சு தொடர்பாக அவரது தந்தையை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
 

Tags :

Share via

More stories