வந்தவாசி அருகே வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது .தெள்ளார் பகுதியில் உள்ள ராஜ நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்ற நிலையில் வணிகவியல் துறை மாணவர்களும் வீதியில் துறை மாணவர்களும் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி கொண்டனர். வகுப்பறைக்குள் நடந்த இந்த மோதல் சம்பவம் குறித்து அறிந்த பேராசிரியர்கள் மாணவர்கள் அப்புறப்படுத்தினர். கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொடர்பாக இரண்டு துறை மாணவர்கள் இடையே இருந்த முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது.
Tags :