ஸ்டார்லிங்க் 10-41 திட்டத்தின் கீழ், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 29 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

by Admin / 03-03-2026 04:06:47am
ஸ்டார்லிங்க் 10-41 திட்டத்தின் கீழ், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 29 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மார்ச் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. 

ஸ்டார்லிங்க் 10-41 திட்டத்தின் கீழ், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 29 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

இது புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து மார்ச்இந்திய நேரப்படி மார்ச் 2 அதிகாலைவிண்ணில் பாய்ந்தது.

இந்த ஏவுதலில் பயன்படுத்தப்பட்ட பூஸ்டர்-  B1078, 26-வது முறையாக வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு, அட்லாண்டிக் கடலில் இருந்த 'ஜஸ்ட் ரீட் தி இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' (என்ற கப்பலில் பத்திரமாகத் தரையிறங்கியது.

அதே நாளில் ,கலிபோர்னியாவிலிருந்து மற்றொரு ராக்கெட் மூலம் 25 செயற்கைக்கோள்களையும் ஸ்பேஸ் எக்ஸ் ஏவியது. இதன் மூலம் ஒரே நாளில் மொத்தம் 54 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி அசத்தியுள்ளது. 

இந்தத் தொடர் ஏவுதல்கள் மூலம் விண்வெளியில் உள்ள மொத்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 9,900-ஐத் தாண்டியுள்ளது. 

ஸ்டார்லிங்க் 10-41 திட்டத்தின் கீழ், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 29 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.
 
Tags :

Share via

More stories