வேளாண் நிதிநிலை அறிக்கை-அஞ்சலை அம்மாள் விருது ,நம்மாழ்வார் விருது விவசாயிகளை கவரப்படுத்தும் முகமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

by Admin / 06-08-2026 10:53:34am
 வேளாண் நிதிநிலை அறிக்கை-அஞ்சலை அம்மாள் விருது ,நம்மாழ்வார் விருது விவசாயிகளை கவரப்படுத்தும் முகமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் வினோத் வாசித்து வருகிறார். அஞ்சலை அம்மாள் விருது ,நம்மாழ்வார் விருது விவசாயிகளை கவரப்படுத்தும் முகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில அளவில் பயிர் விளைவித்தலில் சாதனை புரிவோருக்கு அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படுவதோடு 2.50 லட்சம் முதல் பரிசு, 1.50 லட்சம் இரண்டாம் பரிசு,ஒரு லட்சம் மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வார் பெயரில் சிறந்த இயற்கை வேளாண்மை செய்யக்கூடிய ஐந்து விவசாயிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது இதற்காக 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை மேம்படுத்திட இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில முழுவதும் பசுமையை அதிகரிக்க 17 கோடி மதிப்பில் வேளாண் காடுகளை மாநிலம் முழுவதும் அமைக்கும் திட்டத்திற்கு செலவிடப்பட உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

 வேளாண் நிதிநிலை அறிக்கை-அஞ்சலை அம்மாள் விருது ,நம்மாழ்வார் விருது விவசாயிகளை கவரப்படுத்தும் முகமாக அறிவிக்கப்பட்டுள்ளது...
 
Tags :

Share via
Logo