அதிகாலையில் ஸ்கூட்டியை திருடிய நபருக்கு வலைவீச்சு

by Editor / 25-11-2021 04:06:19pm
அதிகாலையில் ஸ்கூட்டியை திருடிய  நபருக்கு வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பார்ப்பனூர் கிராமத்தில் வழக்கம் போல் இரவு நேரத்தில் வீட்டின் முன் ஸ்கூட்டியை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்ற மோகன்ராஜ் என்பவரின் ஸ்கூட்டி இன்று அதிகாலை வந்து பார்க்கும் பொழுது ஸ்கூட்டி காணாமல் போனதை அடுத்து அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்த்த போது மர்ம நபர் அதிகாலை 3.30மணி அளவில் ஸ்கூட்டியை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சிக்கியது. இதையடுத்து மோகன்ராஜ் ஊத்தங்கரை காவல்துறையில் சிசிடிவி பதிவுகளை பதிந்து புகார் கொடுத்துள்ளார் .இந்த வழக்கு பதிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


 

 

Tags :

Share via

More stories