60 வயது கடந்தவர்கள் இலவசமாக காசி செல்லலாம்:நவம்பர் 20ஆம் தேதி கடைசிநாள்.
ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத் திட்டத்தில் நடப்பாண்டில், மேலும் 100 பேரை இணைத்து மொத்தம் 300 நபர்களை தமிழ்நாடு அரசு தனது சொந்த செலவில் காசிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறது. இந்த வாய்ப்பினை 60 வயதைக் கடந்த இறை நம்பிக்கை கொண்ட இந்து பக்தர்கள் பயன்படுத்திக்கொண்டு, மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற தளத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதற்குண்டான செலவு ரூ.75 லட்சத்தை தமிழ்நாடு அரசே ஏற்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags : People above 60 years of age can visit Kashi for free