தமிழக வெற்றிக்கழக அரசு இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டத்தை கூட அறிவிக்கவில்லை- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை வாசித்து முடித்த பின்பு பேரவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். தமிழக வெற்றிக்காக அரசு பொறுப்பேற்று 85 நாட்கள் ஆகியும் இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டத்தை கூட அறிவிக்கவில்லை என்றும் கடந்த கால அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையே இந்த அரசு பெயர் மாற்றி தங்களுடைய திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொள்வதாகவும் பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் இல்லாத இந்த த வெ க அரசின் ஒரே சாதனை சோசியல் மீடியாக்களில் எய்ம்ஸ் வெளியிடுவது மட்டுமே ஆகும் என்றும் தேர்தல் பிரச்சாரங்களின் போது மக்களுக்கு கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக்காக அரசு நிறைவேற்றி வில்லை என்றும் பெண்களுக்கு மாதம்தோறும் உரிமை தொகையாக 200700 வழங்குவது குறித்து அறிவிப்பு இல்லை ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கும் திட்டம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இடம் பெறவில்லை என்றும் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 4000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பும் இதில் இல்லை என்றும் 10.98,768 கோடி கடன் சுமை தமிழகத்தின் மீது உள்ளதாகவும் நிதி பற்றாக்குறை 1,21,819 கோடியாகவும் உயர்ந்துள்ளதாகவும் இமாலயா கடனை இந்த அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பதற்கான எந்த ஒரு தெளிவான திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்றும் பதவிக்கு வந்த குறுகிய காலத்திலேயே இந்த அரசு 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளதாகவும் முந்தைய திமுக அரசை போலவே தமிழக வெற்றிக்கான கடன் வாங்கியே காலத்தை கடத்துகிறது என்றும் கடுமையாக சாதிய அவர் மாநில நிதியை நிலைநிறுத்த அமைக்கப்பட்டுள்ள அஞ்சு பேர் கொண்ட புதிய பொருளாதார நிபுணர் குழுவானது வெறும் கண்துடைப்பு என்று மேலும் கடன் வாங்குவதை நியாயப்படுத்தவே இந்த குழு பயன்பட போகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியதோடு அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா பேரிடர் போன்ற இக்கட்டான சூழலிலும் மாநில பொருளாதாரம் திறம்பட கையாளப்பட்டது என்றும் அந்த காலகட்டத்தில் வருமானம் எதுவும் இல்லாமலே மக்களுக்கான பல்வேறு நிதி உதவியும் செய்து இருக்கிறது.ஆனால் தமிழக வெற்றிக்கழக அரசு வெறும் பேச்சிலும் முழக்கங்களிலும் மட்டுமே ஆட்சி நடத்துகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த பட்ஜெட்டிற்கு என்ன மதிப்பெண்கள் வழங்குவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பூஜ்ஜியம் என்று சொன்னார்.
Tags :



















