தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 02-12-2023 09:47:20am
தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு

அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு

Share via

More stories