திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொதுவான திட்ட பெயர்களை மாற்றி வைக்கின்ற நிலை தொடரக்கூடாது - முன்னாள் திமுக அமைச்சர் எ.வ .வேலு
இன்று தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் விவாதத்தில் முன்னாள் திமுக அமைச்சர் எ.வ .வேலு கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொதுவான திட்டங்களுக்கு கூட பெயர்களை மாற்றி வைக்கின்ற நிலை தொடரக்கூடாது என்கிற கருத்தை முன்வைத்து பேசினார். முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்கிற பெயரை இந்த அரசு மாற்றியது,? எதற்கு என்றும் முதலமைச்சர் என்பது பொதுவான சொல் என்பதால் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்றி இருக்க வேண்டாம் என்றும் காமராஜ் பெயரை வைப்பதில் யாருக்கும் எந்தவிதமான பிரச்சனை இல்லை அவருக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் புதிய ஒரு சட்டத்தை உருவாக்கி அதில் பெயர் வையுங்கள் என்றும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு இதுபோன்று பெயர் வைப்பது சரியா என்கிற மாதிரி கேள்வியை எழுப்பியவர் முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவதற்காக கூறப்பட்ட அஞ்சு புள்ளி 54 கோடி மதிப்புரான டென்டரில் முறைகேடும் மற்றும் வெளிப்படை தன்மை இல்லை என்றும் இந்தத் திட்டத்திற்கான ஆன்லைன் மற்றும் செய்தித்தாள் விளம்பரர்களின் முரண்பாடு இருப்பதாகவும் சுட்டி காட்டினார். இதற்கு பொதுப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த விவகாரம் குறித்து வெகு விரைவில் பொதுப்பணித்துறை குறித்தான வெள்ளை அறிக்கை வெளியாகும் என்று சொன்னார். இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு முதலமைச்சரை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று பேச அதற்கு சபாநாயகர் அதை அவை குறிப்பிடுவது ஏற்க வேண்டும் என்றும் நேற்று நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எங்களுக்கு அரசு அதிகாரிகள் சலாம் போட்டார்கள் என்று உங்களுக்கு சலாம் போடுகிறார்கள் என்று சொன்ன வார்த்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் பல்வேறு தலைவர்களுக்கான சிலை அமைப்பு மணிமண்டபங்கள் எழுப்புதல் போன்றவற்றையும் அவர் சுட்டிக் காட்டினார் கடந்த ஆட்சியில் ஊழல் என்கிற சொல்லை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிற சபாநாயகர் அதற்கு நீக்கப்படும் என்று சொன்னார். பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் டெண்டர் விடுவது கொடுத்தும் அதை எந்த அடிப்படையில் விடப்படுகிறது அதற்கு ஏற்கனவே 1947 க்கு பிறகு உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் செயல்படுத்தப்படுகின்றன என்கிற கருத்தையும் இந்த முதலமைச்சர் அறையில்தான் ஓமந்தூரார், பக்தவச்சலம், காமராஜர் ,அண்ணா, கலைஞர் ,எம்,ஜி .ஆர் ,ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ,மு .க. ஸ்டாலின் போன்றோரும் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி இருக்கிறார்கள் என்கிற கருத்தையும் முன் வைத்தார்.
Tags :

















