மூன்றாவது குழந்தை மகப்பேறுக்கும் 365 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு
இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேலாண்மை துறையின் மானிய கோரிக்கையின் போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தை மகப்பேறுக்கும் 365 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அரசு ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது குழந்தைக்கும் 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு அளிக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது அதை 365 நாட்களாக உயர்த்தப்பட்டு மூன்றாவது பிரசவத்தின் போதும் பெண்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கால அளவை உயர்த்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியானது.
Tags :


















