ஜம்மு-காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை

by Staff / 02-05-2023 11:27:24am
ஜம்மு-காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட, 2022 பயங்கரவாத சதி வழக்கில், தேசிய புலனாய்வு முகமை (NIA) செவ்வாய்க்கிழமை 12 இடங்களில் சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பயங்கரவாத திட்டங்களை பரப்பியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. சைபர்-ஸ்பேஸைப் பயன்படுத்தி, சிறுபான்மையினர், பாதுகாப்புப் பணியாளர்களை குறிவைத்து, மத நல்லிணக்கத்தை பரப்பி பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதை என்ஐஏ கண்டறிந்துள்ளது.

 

Tags :

Share via