தை அமாவாசை-புனித நீராடி தம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம்

by Admin / 18-01-2026 12:32:54pm
 தை அமாவாசை-புனித நீராடி தம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம்

இன்று தை அமாவாசை ராமேஸ்வரம், கன்னியாகுமரி ,குற்றாலம், காவிரி  போன்ற புண்ணிய ஸ்தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி தம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். அதிகாலையில் நீராடி முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து ராகங்களுக்கு உணவிட்டு ஏழை எளியோருக்கு தானம் வணங்கி தை அமாவாசை தினத்தை கொண்டாடுவர். வருடத்தில் வரும் 12 அமாவாசைகளில் கை ஆடி மற்றும் மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் முக்கியமானவை. இதில் தை அமாவாசை அன்று முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி பூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. தை அமாவாசை வழிபாடு செய்வதால் குடும்பத்தில் பித்ரு தோஷங்கள் நீங்கும் சந்ததியினருக்கு நல்வாழ்வு அமையும் மற்றும் வம்சம் தலைக்கும் என்பது ஐதீகம்

 

Tags :

Share via