’சின்ன கோவா’ என்று அழைக்கப்படும் மணப்பாடு கிராமம்

தூத்துக்குடி: இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரை கிராமமாக மணப்பாடு திகழ்கிறது. இதனை சின்ன ரோமாபுரி, சின்ன ஜெரிசேலம், சின்ன கோவா என்றும் அழைக்கின்றனர். இங்கு இயற்கையாக மூன்றுபுறமும் கடல் சூழந்த மணல் குன்றின் மீது திருச்சிலுவைநாதர் ஆலயம் உள்ளது. இயேசு கிறிஸ்து உயிர்நீத்த மெய்யான திருச்சிலுவையின் ஒரு பகுதியை இந்த ஆலயத்தில் தங்க பேழைக்குள் வைத்து வழிபடுகின்றனர். பனை ஓலை கைவினை பொருட்கள் தயாரிப்பிலும் மணப்பாடு பிரசித்தி பெற்றது.
Tags :