வங்கதேசத்தில் இந்து கோயில்கள் மீது தாக்குதல்: 4 பேர் பலி

வங்கதேசத்தில் இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களில் இதுவரை100 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்து கோயில்கள் சூறையாடப்பட்டதால், பதற்றம் நிலவும் 22 மாவட்டங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா உறுதியளித்துள்ளார். இந்து கோயில்கள் மற்றும் நவராத்திரி விழா நடைபெறும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Tags :