குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது உறுதி ப.சிதம்பரம்

by Staff / 21-04-2024 02:19:15pm
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது உறுதி ப.சிதம்பரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக உருவாக்கிய பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தக வசதிச் சட்டம் 2020, இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) பதிலாக உருவாக்கப்ட் 5 குற்றவியல் சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் . குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.

 

Tags :

Share via