கீழ்த்தரமான அரசியல் - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் வருத்தம்
'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளை வைத்து சிலர் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கதீஜா, இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு 100 சதவீத பொறுப்பும் ஏற்பாட்டாளரைச் சார்ந்தது என்றாலும், தனது தந்தை முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதாகவும், ஆனாலும் சிலர் அவரை மோசடியாளர் போன்று சித்தரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு உதவுவதற்காக பல இசைநிகழ்ச்சிகளை அவர் நடத்தியுள்ளார். அவர் குறித்து பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள் என தெரிவித்துள்ளார்.
Tags :