கலாச்சேத்ரா நிறுவனம் விசாரணை குழுவைஅமைத்துள்ளது.

by Admin / 04-04-2023 09:41:08am
 கலாச்சேத்ரா நிறுவனம் விசாரணை குழுவைஅமைத்துள்ளது.

கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த  பேராசிரியர்கள் ஹரி பத்மன் ,சஞ்சித்தலால், சாய் கிருஷ்ணன் ,ஸ்ரீநாத் ஆகியோரை நிர்வாகம் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் போராடி வந்தனர். இந்நிலையில். இவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ,ஹரி பத்மன் நேற்று கைது செய்யப்பட்டார் .அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பாக லத்திகா சரண் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு விசாரணை குழுவை கலாச்சேத்ரா நிறுவனம் அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி  கண்ணன், மருத்துவர் ஷோபாவா்த்தமன் ஆகியோரும் அடங்குவர்

 

Tags :

Share via

More stories

Logo