25 வயது இளைஞரை 2வது திருமணம் செய்த பெண் கணவன் வெளிநாட்டில்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயது. இந்த தம்பதியினருக்கு 22 வயது மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்களின் படிப்புக்காக அந்த பெண், தங்கள் கிராமத்தில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அந்த வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டில் தனியாக இருந்த அந்த பெண் முகநூல் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் காரைக்காலில் இருந்து ஒரத்தநாடு வந்த அந்த இளைஞர் அங்கு ஆட்டோ ஓட்டிக் கொண்டு அந்த பெண்மணியை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து தனது மகன்களுக்கு தெரியும் முன்னர் வீட்டிலிருந்து நகை, பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இளைஞருடன் வீட்டை விட்டு சென்றார். காரைக்காலில் ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதுடன் அந்த புகைப்படத்தையும், ஆடியோ ஒன்றையும் சிங்கப்பூரில் இருக்கும் கணவருக்கு அப்பெண் அனுப்பியுள்ளார். குடும்பத்திற்காக வெளிநாட்டில் கஷ்டப்படும் அவர், தன் மனைவியின் இந்த செயலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
Tags :