18ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் இன்டெல்?

இன்டெல் நிறுவனத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இன்டெல் நிறுவனத்தில் 1,24,800 பணியாளர்கள் இருந்தனர். இந்த பணிநீக்கம் மூலம் ஆண்டு செலவில் இருந்து $20 பில்லியன் சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த காலாண்டில் $1.6 பில்லியன் இழப்பை சந்தித்தது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சிப்களை தயாரிப்பதில் இன்டெல் சற்று பின்தங்கியுள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
Tags :