பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்.. எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும் பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும். அனுமதி இல்லாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் NCC முகாமில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
Tags :