முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்

முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தலைமைச் செயலாளராக நேற்று (ஆகஸ்ட் 19) பொறுப்பேற்றார். அதே போல், முதலமைச்சரின் இணைச் செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நேற்று நியமிக்கப்பட்டார். மேலும், சில துறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
Tags :