நமது நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சம உரிமைகள் கொடுத்துவிட்டு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுங்கள் -

by Editor / 16-07-2023 09:54:57pm
நமது நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சம உரிமைகள் கொடுத்துவிட்டு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுங்கள் -

நமது நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சம உரிமைகள் கொடுத்துவிட்டு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுங்கள் - ஆதிதமிழர் பேரவை நிறுவனர் பேட்டி.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நெற்கட்டும் செவல் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில், நினைவு தினத்தை அனுசரிப்பது குறித்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று குற்றாலம் பகுதியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கூறுகையில்,

வருகின்ற 20ஆம் தேதி தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை அனுசரிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

 இந்த நினைவு தின அனுசரிப்பு கூட்டத்திற்கு சுமார் 10,000 மேற்பட்ட ஆதித்தமிழர் பேரவை சேர்ந்தவர்கள் வருகை தருவார்கள் எனவும் தெரிவித்தார்.

 தொடர்ந்து பேசிய அவர், பொது சிவில் சட்டத்தை தாங்கள் முற்றிலும் எதிர்ப்பதாகவும், சட்டம் அனைவருக்கும் சமமாக வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு அனைத்து சமூகத்தினருக்கும் இந்த நாட்டில் சம உரிமைகள் வழங்கப்பட்ட பின், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது கொண்டு வரப்படும் பொது சிவில் சட்டமானது சிறுபான்மையின சமூகத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டம் எனவும், அதனால் தாங்கள் இந்த பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

 

Tags :

Share via