பொய் வழக்கு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இது தொடர்பாக அவரை குண்டர் சட்டத்திலும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்ட போராட்டம் நடத்தி தனது குண்டர் சட்டத்தை ரத்தாக வைத்த சுரேஷ் தன்மீது போடப்பட்ட கஞ்சா வழக்கு பொய் வழக்கு எனவும், தன்னை பழிவாங்கும் நோக்கத்தோடு வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளரான கண்மணி என்பவர் இதுபோன்று செயல்பட்டதாகவும், மேலும் தான் கஞ்சா வழக்கில் சிறையில் இருந்த காலகட்டத்தில் தனது அம்மாவின் வீட்டிலிருந்த ரூ.2 லட்சம் பணத்தை வாசுதேவநல்லூர் காவலர்கள் எடுத்து சென்ற நிலையில், அதனை கஞ்சா தொடர்பான வழக்கில் சேர்க்காமல் அந்த வழக்கில் வெறும் ரூ. 100 பணத்தை சேர்த்து விட்டு மீதி பணத்தை திருப்பி கேட்டால் நாங்கள் எடுக்கவில்லை எனவும் கூறுகிறார்கள்.
மேலும், இந்த பணமானது தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து புளியங்குடி சிட்டி யூனியன் பேங்கில் ரூ.2.98 லட்சம் பணத்தைப் பெற்ற நிலையில், ரூ.98 ஆயிரம் பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தி வைத்திருந்த நிலையில், மீதமுள்ள ரூ.2 லட்சம் பணத்தை தனது அம்மாவிடம் கொடுத்து அவரது வீட்டில் வைத்திருந்ததாகவும், இந்த நிலையில் அந்தப் பணத்தை போலீசார் எடுத்து சென்று விட்டு தற்போது இல்லை என்கிறார்கள் எனவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரிக்க தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது காவல் ஆய்வாளர் உட்பட குற்றம் சாட்டப்படும் காவலர்கள் மீது புளியங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பணம் செய்ய வேண்டும் என தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
மேலும், காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தென்காசி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
Tags : பொய் வழக்கு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு.