முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிரதமர்  மோடியுடன்  ஆலோசனை.

by Admin / 04-11-2021 12:58:50am
முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிரதமர்  மோடியுடன்  ஆலோசனை.

 

நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் ஆலோசனையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார்.
 
ஜி-20 உச்சிமாநாடு, சிஒபி-26 ஆகியவற்றில் பங்கேற்று நாடு திரும்பி பிரதமர் நரேந்திர மோடி, குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா தடுப்பூசி முதல் டோஸை 50 சதவீதத்திற்குக் குறைவாகவும், இரண்டாவது டோஸினைக் குறைந்த எண்ணிக்கையிலும் செலுத்தியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் அதிகமான மாவட்டங்களிலும், மற்ற மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்..

 

Tags :

Share via