வியாபாரி கடத்தி கொலை போலீசார் விசாரணை

by Staff / 16-11-2023 01:55:35pm
வியாபாரி கடத்தி கொலை போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கால்வாய் கிராமம் பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் மகன் பெருமாள் (76), இவர் செய்துங்கநல்லூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை கால்வாய் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் அவர் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. இது குறித்து அவரது மகன் வெள்ளத்துரை என்பவர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை சம்பவ இடத்துக்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.  

மேலும் இறந்து கிடந்த பெருமாள் உடம்பில் காயங்கள் இருந்தது. இதனால் யாரோ மர்ம ஆசாமிகள் இவரை கொலை செய்து பிணத்தை குளத்துக்குள் வீசினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via