தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு முகக்கவசம் அணிய வலியுறுத்தல்.
தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கையாக மக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.தமிழகத்தில் திடீரென காய்ச்சல் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்பவர்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரமாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக குளிர் பிரதேசங்கள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களான சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாகியுள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல் பாதிப்போடு வரும் நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பரிசோதனைக்குப் பிறகு புதிய வைரஸ் கண்டறியப்பட்டால், மேலும் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்குக் காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மற்றவர்கள் முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாகச் செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags : தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு முகக்கவசம் அணிய வலியுறுத்தல்.



















