காவல்துறையினர் மீது தாக்குதல் 29 வடமாநிலத்தொழிலாளர்கள் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகிலுள்ள கட்டுப்பள்ளியில் காவல்துறையினர் மீது தாக்குதல் 29 வடமாநிலத்தொழிலாளர்கள் கைது.காட்டுப்பள்ளியில் சக தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு வடமாநிலத்தொழிலாளர்கள் நேற்று போராட்டம் நடத்திய போது காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.இந்த சமபவத்தில் ஈடுப்பட்ட 29 வடமாநில தொழிலாளர்களை கைதுசெய்த போலீசார் .110 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில் 29 பேரை இன்று அதிகாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். இவர்கள் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
Tags :