ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பாக இன்றும், நாளையும் ஆலோசனை.

சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பாக இன்றும், நாளையும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடும் இக்கூட்டத்தில், ஜிஎஸ்டியில் வெளிப்படைத்தன்மை, கூடுதல் சலுகைகளுடன் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் இருக்கும் 5%, 12%, 18%, 28% ஆகிய 4 வரி அடுக்குகள் இனி 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகளாக குறைக்கப்படவுள்ளன.
Tags : ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பாக இன்றும், நாளையும் ஆலோசனை