வரலாற்றில் இன்று 03 செப்டம்பர் 2025-புதன்

by Staff / 03-09-2025 09:23:58am
வரலாற்றில் இன்று 03 செப்டம்பர் 2025-புதன்

301 : உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும் மிகவும் பழமை வாய்ந்த குடியரசுமான சான்மரீனோ செயின்ட் மரீனஸினால் உருவாக்கப்பட்டது.

1189 : முதலாம் ரிச்சர்ட் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1260 : பாலஸ்தீனத்தில் மங்கோலியர்களுடன் நடைபெற்ற போரில் மாம்லுக்கள் வெற்றி பெற்றனர்.

1759 : இலங்கை, டச்சு அரசு பைபிளின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது. 

1798 : பெலீசின் கரையில் ஸ்பெயினுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒரு வாரம் போர் நடைபெற்றது.

1801 : இலங்கையில் நெல் மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது .

1812 : அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் 24 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1843 : ஏதென்ஸ் நகரில் கிளர்ச்சி ஏற்பட்டதால் , மன்னர் ஒட்டோ அரசியல் அமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1855 : நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கிப் பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர் .

1875 : அதிகாரப்பூர்வமான முதல் போலோ விளையாட்டு அர்ஜென்டினாவில்  விளையாடப்பட்டது.

1878 : தேம்ஸ் நதியில் பிரின்சஸ் அலைஸ் பயணிகள் கப்பல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

1879 : காபூல் நகரில் பிரிட்டன் தூதரும் அவரது 72 ஊழியர்களும் ஆப்கானிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டனர்.

1914 : அல்பேனிய இளவரசர் வில்லியம் அவரது ஆட்சியின் மீது ஏற்பட்ட பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சிக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறினார்.

1916 : ரயில்வே ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலைக்கான சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் கையெழுத்திட்டார்.

1917 : இத்தாலியில் நிலக்கரி பற்றாக்குறையால் 75 சதவீத ரயில்கள் ஓடவில்லை.

இங்கிலீஷ் கால்வாயில் ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பல், பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பலை மூழ்கடித்தது.

1924 : சீனாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1930 : டொமினிக்கனில் வீசிய சூறாவளியில் 2,000 பேர் வரை உயிரிழந்தனர். 
4,000 பேர் காயமடைந்தனர்.

1939 : இரண்டாம் உலகப்போர்:- பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது கடல்வழித் தடையை ஏற்படுத்தியது.

1967 : ஸ்வீடனில் சாலை போக்குவரத்து விதி இடது புறத்தில் இருந்து வலது புறம் என்று மாறியது.

1970 : அமெரிக்காவின் கான்சாஸில் எனுமிடத்தில் தர்பூசணி அளவு கொண்ட ஆலங்கட்டி மழை பெய்தது.

1971 : கத்தார் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.

1984 : ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தக் கலவரத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

1997 : ஏர்லைன்ஸ் விமானம் புனோம்பென் விமான நிலையம் அருகே விழுந்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.

2017 : வடகொரியா தனது ஆறாவதும், மிகவும் ஆற்றல்மிக்கதுமான அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது.

 

Tags :

Share via