மகாராஷ்டிரா- ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு

by Admin / 20-11-2024 08:30:42pm
மகாராஷ்டிரா- ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு

மகாராஷ்டிரா- ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று 6 மணியுடன் நிறைவேற்றது. வாக்களித்து வரும் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நிறுவனங்கள் எக்ஸிட் போல் நடத்தி எந்த கட்சி பெரும்பான்மை பெறும் என்கிற விவரங்களை சேகரித்து தரவுகளின் அடிப்படையில் வெற்றி தோல்விகள் குறித்து கணிப்பை வெளியிடும். அந்த அடிப்படையில் இன்று பல்வேறு கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் மகாராஷ்டிரா சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 288 பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அக் கூட்டணி 130 முதல் 145 வரை இடங்களை பெறும் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 125 முதல் 140 இடங்கள் கிடைக்கும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.என் டி ஏ 175 முதல் 195 இடங்களை பெரும் என்றும் எம்.வி.ஏ 85 முதல் 112 இடங்களை பெறும் என்றும் மற்றவை ஏழு முதல் 12 இடங்களை கைப்பற்றும் என்றும் ஒரு கருத்துக்கணிப்பு. மற்றொரு கருத்துக்கணிப்பு பாரதிய ஜனதா கட்சி 128 இல் இருந்து 142 வரை பெரும் என்றும் காங்கிரஸ் கட்சி 125 இல் இருந்து 140 வரை பெரும் என்றும் மற்ற கட்சிகள் 18 முதல் 23 வரை பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 146 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சில நிறுவனங்கள் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காதது என்றும் சொல்லியுள்ளது கவனிக்கத்தக்கது.

 81 இடங்களைக் கொண்ட ஜார்கண்ட் தொகுதிக்கு வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் கேட்ட விவரங்களின் அடிப்படையில் ஆளும் ஜே எம் எம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்த கூட்டணிக்கு 37 முதல் 47 தொகுதிகள் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களிலிருந்து 40 இடங்களில் வெற்றி பெரும் என்றும் மற்ற கட்சிகள் ஆறு தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணித்து வெளியாகி உள்ளது. கணிப்பின் அடிப்படையில் இரு வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஜார்கண்டை பொறுத்தவரை பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று ஒரு சில கருத்து கணிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன.

 

Tags :

Share via