பிரதமர் நரேந்திர மோடி இன்றுதிருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிபொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிபொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கண்டு திமுக அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். திமுகவின் தவறான நிர்வாகம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்கள் உணர்ந்துள்ளதால், அவர்கள் தற்போது என்டிஏவின் வளர்ச்சிப் பாதையை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.முன்னதாக, திருச்சியில் சுமார் ₹5,650 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் ஜி.கே. வாசன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர். சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், திருச்சியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது
Tags :















.jpg)


.jpg)
