கேரள‌ மாநில‌ சுற்றுலா ப‌யணிகளின் வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி

by Editor / 05-10-2022 11:06:50pm
 கேரள‌ மாநில‌ சுற்றுலா ப‌யணிகளின் வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி பிரதான மலைச்சாலையில் ஏலக்காய் வளைவு அருகே கொடைக்கானலிருந்து பழனி நோக்கி சென்ற கேரள சுற்றுலாப்பயணிகளின் டெம்போ வேன்  சாலையில் இருந்த‌ தடுப்புச்சுவரை இடித்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, வாக‌ன‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ளை சிறு சிறு காயங்க‌ளுட‌ன் இப்ப‌குதியில் இருந்த‌ வாக‌ன‌ ஓட்டுன‌ர்க‌ள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள‌ன‌ர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த அஜீஸ்(42) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.இந்த வாக‌ன‌ விப‌த்தால் பழ‌னி பிர‌தான‌ ம‌லைச்சாலையில் சிறிது நேர‌ம் போக்குவ‌ர‌த்து பாதிப்பு.

 கேரள‌ மாநில‌ சுற்றுலா ப‌யணிகளின் வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி
 
Tags :

Share via
Logo