தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறாது - தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளிலும் முறைகேடுகள் அல்லது வன்முறை தொடர்பான எந்த புகாரும் வராததால் எந்த ஒரு தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், வாக்குகள் அனைத்தும் பலத்த மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 5. 73 கோடி வாக்காளர்களுக்கு மொத்தம் 75 ஆயிரத்து 064 வாக்குச்சாலைகள் அமைக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்கு எண்ணிக்கை மே 4 தேதி நடைபெறுகிறது,
Tags :



















