மருத்துவ கல்வி இடங்களை நிரப்ப சட்ட ரீதியான நடவடிக்கை-அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மருத்துவ கல்வி – ஆராய்ச்சி இயக்கத்துகான புது லட்சினையை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.மருத்துவ கல்வி இயக்ககம், மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 MBBS இடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால்அந்த கடிதத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து இதுவரையில் எந்த பதிலும் இல்லை. கடந்த ஆண்டும் 6 இடங்கள் நிரப்பாமலே விடப்பட்டது.இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட ரீதியான கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.
Tags :