5பவுன் நகைக்கடன் முறைகேடு -கூட்டுறவு சங்கதலைவர்.செயலாளர் தற்காலிக பணி நீக்கம் - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 489 நபர்களுக்கு ரூ.3.79 கோடி ரூபாய் கடன் வழங்கமால் நகையை மட்டும் பெற்றுக்கொண்டு, கடன் வழங்கியதாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அச்சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் முறைகேட்டிற்கு காரணமான சங்கத்தின் செயலாளர் மற்றும் இதர நபர்கள் மீது குற்றப்புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Tags : 5 pound jewelery loan scam - Co-operative society chairman, secretary fired - Tamil Nadu government order