அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் ஈரானிடம் இருந்து நிபந்தனையற்ற சரணடைதலை கோரியுள்ளார்.

by Admin / 07-03-2026 07:36:21am
அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப்  ஈரானிடம் இருந்து நிபந்தனையற்ற சரணடைதலை கோரியுள்ளார்.

அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப்  ஈரானிடம் இருந்து நிபந்தனையற்ற சரணடைதலை கோரியுள்ளார். ஆபரேஷன் எபிக் பியூரி  என்ற பெயரில் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரானின் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட  டிரம்ப், நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் செய்யப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஈரான் சரணடைந்த பிறகு, அமெரிக்காவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் என்ற பொருளில் என்ற புதிய வாசகத்தையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

 ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வந்துள்ளது. ஈரான் இதுவரை சரணடைய விருப்பம் தெரிவிக்கவில்லை.

மாறாக,  அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, இந்த ராணுவ நடவடிக்கைகள் மேலும் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

 

Tags :

Share via