பிரபாகரன் உயிருடன் இருந்தால் நல்லது தான்: கே.எஸ். அழகிரி

by Staff / 14-02-2023 03:18:51pm
பிரபாகரன் உயிருடன் இருந்தால் நல்லது தான்: கே.எஸ். அழகிரி

பிரபாகரன் உயிருடன் இருந்தால் நல்லது தான் எனவும்; அவரை நானே நேரில் போய் பார்ப்பேன் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி, நிமிடத்திற்கு நிமிடம் உறுதி செய்யப்படுகிறது. கூட்டணி கட்சிகள் எங்களோடு இணைந்து சிறப்பாக செயல்படுகிறார்கள். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, “உயிருடன் இருந்தால் நல்லது தான், அவர் உயிருடன் இருப்பது தெரிந்தால் நானே நேரில் போய் பார்க்கிறேன்” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo