அமைச்சர் தி.மு.கவுக்கு எதிராக இவ்வாறு பேசி வருவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்- திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ். பாரதி
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜீனா கடந்த திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்விற்காக காவல்துறையின் உதவியுடன் கரூரில் எங்கள் மக்களை திட்டமிட்டு கொன்று குவித்தனர். இதற்கு விரைவில் உரிய பதிலடி கொடுப்போம் என்றும் கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம் என்றும் ஆவேசமாக பேசினார். கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ விசாரித்து கொண்டிருக்கின்ற நிலையில் .இந்த சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என்று அமைச்சர் பேசியதற்கு எதிராக திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ். பாரதி.உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். சி.பி.ஐ விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் இருப்பதோடு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் தி.மு.கவுக்கு எதிராக இவ்வாறு பேசி வருவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கூறி அவர் அவதூறாக பேசி வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவதூறு பரப்பி வருவதால் அவர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்து உள்ளார்.
Tags :


















