7 மணி நேர தாமதம்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்

by Editor / 15-07-2025 01:03:15pm
7 மணி நேர தாமதம்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படுவதற்காக தயாரான போது, விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். மும்பை செல்லும் விமானம் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் தாமதமானதால் பயணிகள் இருவர் ஆத்திரமடைந்து விமானியை மிரட்டச் சென்றதோடு, இடையூறு ஏற்படுத்தியுள்ளனனர். மேல் நடவடிக்கைக்காக அவர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via