சுழற்றியடித்த சூறாவளி காற்று. பொதுமக்கள் அச்சம்!

by Editor / 03-05-2021 11:23:18am
சுழற்றியடித்த சூறாவளி காற்று. பொதுமக்கள் அச்சம்!

ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் மகினோஹாரா நகரில் நேற்று திடீரென்று சூறாவளி காற்று சுழற்றியடித்தது. அதில் அங்குள்ள கட்டிடத்தில் மேற்கூரைகள் பயங்கர காற்றில் பறந்தன. மேலும் கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் சுக்குநூறாக நொறுங்கியது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கார்கள் சாலைகளில் கவிழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். ஆனால் அந்த சூறாவளி காற்றினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த இரண்டு தினங்களாக அங்கு பலத்த காற்று தொடர்ந்து வீசி வருகிறது. அதேபோல் கடந்த சனிக்கிழமை அன்று மாலையில் திடீரென்று சூறாவளி காற்று வீசியதால் அங்கிருந்து கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அதில் மூன்று பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த பலத்த காற்றால் 3,200 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via