ஜீன்ஸ் பேண்டில்  தங்கம் கடத்திய வாலிபர்கள் கைது

by Admin / 22-11-2021 02:10:59pm
ஜீன்ஸ் பேண்டில்  தங்கம் கடத்திய வாலிபர்கள் கைது

ஜீன்ஸ் பேண்டில்  தங்கம் கடத்திய வாலிபர்கள் கைது
 கேரளாவுக்கு வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக புகார் வந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று சார்ஜாவில் இருந்து கொச்சி நெடும்பசேரி சர்வதேச விமான நிலையத்திற்கு  விமானம் வந்தது. அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது 2 வாலிபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

 அதிகாரிகள் வாலிபர்களை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் உடமைகளைசோதனை செய்தனர்.

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்தது தெரியவந்தது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.  தங்கத்தின் மதிப்பு ரூ.2.13 கோடி .   அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிவாசன், பக்ரூதின் உசேன் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து கொச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo