சட்டமன்ற உறுப்பினா்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவித்தது, தமிழக அரசு.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி 8 28.36 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் மூன்று கோடியுடன் ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தையும் சேர்த்து 3.54 கோடியை தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கியுள்ளது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான அரசு பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகள் குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற வசதிகளை மேம்படுத்துதல் உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களின் உள்கட்ட அமைப்பை உருவாக்குதல் குடிநீர் விநியோகம் சமூக நலக்கூடங்கள் நூலகங்கள் போன்ற பொதுமக்களின் உள்ளூர் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக இந்த தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
Tags :


















