தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பரப்பரை கூட்டத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின்

by Admin / 03-10-2026 02:07:31am
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பரப்பரை கூட்டத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின்

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பரப்பரை கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜயை கடுமையாக விமர்சித்தார். திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசும் பொழுது மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய சட்டமன்றத்தில் மாண்பை கடித்துவிட்டால் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் சீப் மினிஸ்டர் ஆக நடந்து கொள்ளுங்கள் சீப்பான மினிஸ்டர் ஆக நடந்து கொள்ளாதீர்கள் ப்ரோ என்றும் மக்கள் நிம்மதியை கெடுத்து மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது முதலமைச்சர் பந்தா செய்து கொண்டு வெறும் ரீல்ஸ் எடுக்கும் முதலமைச்சராக மட்டுமே வலம் வருகிறார் என்றும் சட்டமன்றத்தில் தன்னை ஸ்டாலின் மிசாவின் கைதாகவில்லை என்று பேசி கொச்சைப் படுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யார் கொச்சைப்படுத்தினாலும் மிசா வரலாறு போன்ற தியாகங்களை மாற்றிவிட முடியாது என்றும் ஸ்டாலின் ஆகிய என் ஆட்சியில் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இலவச பேருந்து திட்டம் ,காலை உணவு திட்டம் ,மாணவர் உதவித்திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செய்ததாகவும் தெளிவுப்படுத்தினார் இடைத்தேர்தல் என்பது அங்கு போட்டியிட்டு வென்ற ஒருவர் இறந்து படும் பொழுது தான் வரும். ஆனால் எங்கே தேர்தல் மை வைத்த விரல்கள் காயும் முன்பாகவே பெட்டி வாங்கி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் சேர்ந்து விட்டார்கள் என்றும் நூத்தி பதினெட்டு உறுப்பினர்கள் இருந்தால்தான் அறுதி பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியும். ஆனால், இவர்கள் 107 உறுப்பினர்களுடன் மற்ற கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் எழுத்து ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுடைய ஆட்சிக்கு சாட்சியாக இந்த மூன்று நான்கு மாதத்தில் மின்வெட்டு, கொலை, பாலியல் பலாத்காரம், பால் விலை உயர்வு, மளிகை பொருள்கள் விலைஉயர்வு, என விலைவாசி உயர்ந்து பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo