வஞ்சம் வச்சு பழி தீர்ப்பேன் சீமான்

by Staff / 14-02-2023 04:21:47pm
வஞ்சம் வச்சு பழி தீர்ப்பேன் சீமான்


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து, நேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். ஈரோடு திருநகர் காலனியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாற்று கட்சியே நாங்கள்தான். இந்த 2 கட்சிக்கும் ஓட்டுப்போடும் மக்கள், தோற்று போனவர்கள்தான். என் தாய் நிலம் தமிழீழத்தில் ரத்தம் சிந்திய மக்களின் நினைவாக வஞ்சம் வைத்து பழிதீர்ப்பேன். எனக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று சூளுரைத்தார்.

 

Tags :

Share via

More stories