ராஜேந்திர பாலாஜி முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை நான்கு வாரத்திற்குள் விசாரித்து நீக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம்

by Admin / 12-03-2026 11:53:33pm
ராஜேந்திர பாலாஜி முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை நான்கு வாரத்திற்குள் விசாரித்து நீக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை நான்கு வாரத்திற்குள் விசாரித்து நீக்க வேண்டும் என்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி 3.10 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஆறு வங்கிக்கணக்குகள் காவல்துறையினரால் முடக்கப்பட்டு இருந்தன. இந்த வங்கி கணக்கு முடக்கத்தை விசாரித்து அதனை நீக்குவது குறித்து நாலு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது .இந்த வழக்கில் மீண்டும் மேல்விசாரணை நடத்தக்கூடிய மனு தொடர்பாக ராஜேந்திர பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

Tags :

Share via

More stories